புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்- இலக்குவனார் திருவள்ளுவன்
புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் புதுச்சேரியில் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து மத்தியக்கல்வி வாரியக்கல்வி முறையைப் புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொம்மைப் பதவியான ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசையால் அரசின் கல்விக் கொள்கையில் குறுக்கிட்டுப் புகுத்தப்பட்டதே இக் கொள்கை. பா.ச.க. வின் வெளிப்படையான கொள்கையே நாட்டை இந்துமயமாகவும் இந்திய மயமாகவும் மாற்றுவதுதான். இதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே மொழி என்பனவற்றை வலியுறுத்தி வருகிறது; வாய்ப்புள்ள நேர்வுகளில் எல்லாம் அதற்கேற்பவே செயற்பட்டு வருகிறது….
தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்
தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி. தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம்…
வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை
வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது. வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம். தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும். …
புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மகளிர் விழா, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். விழாவில் பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர் புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு துணைச்செயலர்…
தமிழகத் தொல்லியல் பயிலரங்கம், கோவை
ஆடி 30 & 31, 2016 / ஆக. 15 & 16, 2015
வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?
திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை திருமணங்கள் உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது. வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…