இந்துக்கள் யார்? 10, 000 ஆண்டுகளின் முன்னர், காகேசியரில் ஒரு கூட்டத்தார் தாம் இருந்த நாட்டைவிட்டு மேற்கே ஐரோப்பியாவிற்கும், மற்றொரு கூட்டத்தார் இந்தியாவிற்கும் புறப்பட்டார்கள். மேற்கே சென்றவர்கள் செர்மனி முதலிய இடங்களில் தங்கினார்கள். கிழக்கே சென்றவர்கள் கைபர், காபூல், போலன் கணவாய்களின் வழியாகச் சிந்து ஆற்றங்கரையில் குடியேறினார்கள். பின்னவர்களாகிய ஆரியர்கள் சிந்து ஆற்றங்கரையில் குடியேறுவதற்கு முன்னரே, தமிழர்கள் அராபியர்களுடனும் பாரசீகர்களுடனும், அக்கேடியர், சுமேரியர், அசிரிய தேசத்து அசுரர், ஃபினீசியர் முதலியோர்களுடனும் – தரைவழியாகவும் தண்ணீர் வழியாகவும் வாணிபம் செய்து வந்தார்கள். அராபியர்களும் பாரசீகர்களும் தம்…