மாணிக்கவாசகம் பள்ளியில் பாரதியார் விழா
மாணிக்கவாசகம் பள்ளியில் பாரதியார் விழா தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் சீவா வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்கள் சனசிரீ, ஐயப்பன் “பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை” என்கிற பாடலையும், மாணவர்கள் கார்த்திகேயன், இராசேசுவரி, “பாரதியாரின் புதுமைப் பெண்” என்கிற தலைப்பில் அமைந்த கவிதையையும் பாடினார்கள். மேலும் பாரதியார் படத்துக்கு வண்ணம் தீட்டுதல், பாரதியார் படம் வரைதல் ஓவிய போட்டியில் ஆகாசு, பாலமுருகன், அம்முசிரீ,…
பாரதியார் சங்கம் நடத்தும் பாரதியார் விழா, சென்னை 28
ஆவணி 27, 2046 / செட்டம்பர் 12, 2016 பிற்பகல் 3.00 பாரதியார் விருது & பாரதி மணிச்செல்வர் விருதுகள் வழங்கல்
இணையவெளியில் பாரதியார் விழா – மறைமலை இலக்குவனார்
இணையவெளியில் பாரதியார் விழா திசம்பர் 11: பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பிறந்தநாள். மழைத் தொல்லையில் வெளியே விழாவுக்குப் போகமுடியவில்லை. வீட்டிலேயே கணினிமுன் அமர்ந்து கொண்டாடுவோம். பாரதியாரைப் பற்ரிய உங்கள் கவிதையை, கட்டுரையை ஒருங்குறி எழுத்தில் வடித்துக் கவிதை விக்கிக்கு அனுப்புங்கள். உங்கள் முகநூல் கணக்கைக் கொண்டு கவிதை விக்கியில் சிக்கலின்றி நுழையலாம் .உடனடியாகத் தரவேற்றம் செய்யலாம். உங்கள் பேச்சைக் கூட எம்பி4 கோப்பில் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அனுப்பலாம். வாருங்கள். உலகப்பெரும் பாவலன் பாரதியின் புகழ் பரப்புவோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்
21ஆம் ஆண்டு பாரதித்திருவிழா, சென்னை
மார்கழி 25,26, 27&28, 2045 சென்னை திசம்பர் 11-14, 2014
பாரதியார் விழா, சென்னை
பாரதியார் விழா ஆவணி 26, 2045 / செப். 9, 2014