செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!
செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்! செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். . இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும்,…
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்! தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர். நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…
செங்கை நிலவனுக்கு வளைகுடா வானம்பாடியினர் பாராட்டு!
வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா! படஉருவாக்குநர்க்குப் பாராட்டு! குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா, ஆடி 23, 2045 / ஆக.8, 2014 வெள்ளி மாலை 5.30 மணிக்கு மங்காப்பு விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா,குவைத்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த “இருக்கு ஆன இல்ல” படஉருவாக்குநர்களைப் போற்றும் வகையிலும், அவர்களுள் ஒருவரான திரு செல்லத்துரை, பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவன் ஆகியோரைப் பாராட்டும் வகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர்…
எம்.பி.நிர்மல் அவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் பாராட்டு!
செவ்வை நேர்த்தி அமைப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மைக்குத் தொண்டாற்றி உலகப்புகழ் பெற்றுள்ள எக்சுநோரா நிர்மல் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2014 தமிழ் விழாவில் பாராட்டினர். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்கான கருத்தாக்கத்தைப் பல தரப்பாரிடமும் ஏற்படுத்தி வரும் அவரது தொண்டினை விழாவில் பாராட்டினர். பேரவையின் முன்னாள் தலைவரும் 2008 பேரவைத் தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரருமான முனைவர் தனிக்குமார் சேரன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் விசயகுமார் முத்துசாமி.பொன்னாடை அணிவத்து வாழத்தினார். சமயங்களுக்கு…
செருமனியில் தமிழ் எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்!
செருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு (International Zentrum – Flachs Markt– 15. 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த) பன்னாட்டு மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா தான்லி, திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்றத் தொடங்கியது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்…