வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள்

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு   தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, வைகை அணை, செயமங்கல் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்களை உடைத்துவிட்டு புதிய பாலங்களைக் கட்டுகின்றனர். இவ்வாறு கட்டப்படும் பாலங்கள் தரமற்றவையாக உள்ளன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   தரைப்பாலங்களில் பைஞ்சுதைக் குழாய்களை(சிமிண்ட்டு) வைத்து அதன்மேல் எந்த விதக் கலவையும் போடாமல் வெறும் சல்லித்தூசிகளைக் கொட்டிவிட்டு அதன்மேல் செம்மண்ணை வைத்து வேலையை முடித்துவிடுகின்றனர். இவ்வாறு அமைக்கப்படும் தரைப்பாலங்களில் சுமையூர்திகள், கனவகை இயந்திரங்கள் செல்லும் போது பாலங்கள் உடைந்து விடுகின்றன….

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் பாலங்கள் சாலைகள் ஆகியவை களமாக மாறிவருகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் வானம் பார்த்தபூமிப் பகுதியில் எள், தட்டாம்பயிறு, உளுந்தம்பயறு, சோளம் போன்றவற்றைப் பயிரிட்டனர். தற்பொழுது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் கூல(தானிய)வகைகளைப் பறித்து அவற்றைக் காயவைத்து அதன்பிறகு அடித்து அல்லது மாடுகளை வைத்து மிதித்துப் பயிர்களை தனித்தனியாகப் பிரிப்பார்கள். அதன்பின்னர் காற்று வரும் திசையை நோக்கி முறம் போன்ற பொருட்களால் எடுத்து வீசும்போது…