இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: தொடர்ச்சி) 16 மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும் பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி இறைவனே நாடிவந்து, காட்சி தந்து இன்பம் நல்கி இன்னருள் வழங்குகின்ற செய்திகளைக் கூறும் ஒப்பற்ற நூலாகும். மாணவர் ஆற்றுப்படையோ, வறுமை காரணமாக இளமையிற் கல்விச்…