பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8     தொல்காப்பி    யர்மொழியை  வள்ளு  வர்தம் தொல்குறளை    கம்பர்சொல்   கவிந  யத்தை உள்ளத்தை   உருக்குகின்ற   தேவா   ரத்தை உரிமைப்பா   பாரதியை   தாசன்  தம்மை எல்லைக்குள்   இல்லாமல்   ஞால   மெல்லாம் எம்மொழியில்   படிப்பதற்கும்   இணைய   மென்னும் நல்வலையுள்   வளங்களுடன்   நுழைந்த   தாலே நற்றமிழோ    உலகமொழி   ஆன   தின்று !     பிறமொழியின்   அறிவெல்லாம்   இணையத்   தாலே பிறக்குமினி   தமிழினிலே!   உலகந்   தன்னில் சிறகடிக்கும்   புதுமையெல்லாம்   ஒருநொ  …

மக்கள் திலகம் எம்ஞ்சிஆர்! 2/2 – கருமலைத்தமிழாழன்

(மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர்  1/2 தொடர்ச்சி)   மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர்!  2/2    அரிதரிது   மானிடராய்ப்   பிறத்த  லென்றார் அதனினும்கூன்   குருடின்றிப்   பிறத்த  லிங்கே அரிதென்றார் !   அதனினுமே   அரிதாம்   என்றார் அழகாக  எம்ஞ்சிஆர்போல்  பிறத்த  லென்றார் அரிதென்றார்   அதனினுமே   அவரைப்  போல அள்ளியள்ளிக்   கொடுக்கின்ற  மனித  நேயம் பெரிதாக   உள்ளவர்கள் !   ஔவை   சொல்லின் பெருமைக்குக்   காட்டிவர்போல்  உள்ளோ  ரரிதே !   சீர்திருத்தப்   புரட்சிகளைச்   செய்த  தாலே சிறப்பாக   நல்புரட்சித்   தலைவ  ரென்றார் ஊர்மக்கள்   மீதன்பு   செய்த   தாலே உயர்வாக  …

சங்கே முழங்கு – பாவலர் கருமலைத்தமிழாழன்

  சங்கே  முழங்கு !   வரிகளிலே முருகனையே முதலில் பாடி வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப் பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப் பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர் அரிதான பாரதியின் தாச னாகி அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால் ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !   சாட்டையிலே சொற்களினை வீசி மூடச் சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம் வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம் கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக் கூட்டிவந்தே…

எல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்

எல்லாம் கொடுக்கும் தமிழ்!     என்னயில்லை   நம்தமிழில்   ஏன்கையை   ஏந்தவேண்டும் இன்னும்   உணரா   திருக்கின்றாய் — நன்முறையில் பொல்லாத   தாழ்வுமனம்   போக்கியுள்ளே   ஆய்ந்துபார் எல்லாம்   கொடுக்கும்   தமிழ் !   எள்ளல்   புரிகின்றாய்   ஏகடியம்   பேசுகின்றாய் உள்ள   துணரா   துளறுகின்றாய் — உள்நுழைந்து கல்லாமல்   தாழ்த்துகிறாய்   காண்கதொல்   காப்பியத்தை எல்லாம்   கொடுக்கும் தமிழ் !   எந்த   மொழியிலுமே   இல்லா   இலக்கணமாம் நந்தமிழில்   மட்டுமுள்ள   நற்பொருளாம் — செந்தமிழர் நல்லொழுக்க   வாழ்க்கைக்கு   நல்வழியைக்   காட்டியிங்கே எல்லாம்   கொடுக்கும்   தமிழ் !   ஐந்தாய்  …

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்

(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5  தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5   இந்தியாவில்   மட்டுமன்றி  பிரான்சு  நாட்டில் இயங்குகின்ற   பேரவைதான்   அசாம்  தன்னில் சந்தமிகு   துவக்கவிழா   காணு   கின்றோம் சார்ந்திருக்கும்   மேகாலய   மாநி  லத்தில் நந்தமுடன்   நாளையங்கே   துவக்கு  கின்றோம் நன்றாகப்   பேரவைதான்   வளர்வ   தாலே சிந்தனைகள்   ஒன்றாகி   உலக  மெல்லாம் சிறப்பாக   நட்புறவோ   ஓங்கும்  நன்றாய் !   வெற்றுரைகள்   அமர்ந்துபேசி   கலைவ  தன்று வேதனைகள்  தீர்க்கின்ற   செயல்கள்  செய்து நற்றொண்டாய்   கல்விகற்க   இயலா   ஏழை…

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 – கருமலைத்தமிழாழன்

 (மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5    அமைச்சரினை   வரவழைத்து   இதயா  ரிசுவி அரும்விருதை   ஒட்டமா  வடியில்  தந்தே எமையெல்லாம்   பெருமைசெய்த   சிறப்பெல்  லாமே எமையிணைத்த  பேனாவின்   நட்பா  லன்றோ அமைதியான   கொட்டகலா   மலையின்  ஊரில் அமைந்திருக்கும்   கல்லூரி   தனில  மர்த்தி எமையெல்லாம்  சிறப்பித்த   சுமதி   என்னும் எழிற்கவிஞர்   நட்பெல்லாம்   பேனா  வாலே !!   நல்லமுத   பேனாநண்பர்  பேரவை  யாலே நல்லவர்கள்  பன்னூறு   நட்பாய்  ஆனார் சொல்லமுத   உரைகளாலே   நெஞ்சை …

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி)   மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5   நேரினிலே  நான்பார்க்கா   நாட்டி  லெல்லாம் நேரியநல்   நண்பர்கள்   இருப்ப  தெல்லாம் பாரினையே   பேனாக்குள்   அடக்கி  யெங்கும் பார்க்கவைக்கும்   அஞ்சல்தம்   அட்டை  யாலே ஊரினையே  கடக்காத   பெண்கள்  கூட உலகத்தின்  மறுகோடி   பெண்க   ளோடே சீரியநல்   நட்புதனை   வளர்த்துக்   கொண்டு சிறந்தறிவு   பெறுகின்றார்   பேனா  வாலே !   சிங்கப்பூர்   தனைநேரில்   பார்க்கா   முன்பு சிறப்பான   மலேசியாவைப்   பார்க்கா   முன்பு சிங்களரால்   தமிழுறவு   சிதைந்து  …

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

(மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று 1/5 தொடர்ச்சி)   மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5    கற்பனைக்கும்    எட்டாத   அற்பு   தங்கள் கரத்திருக்கும்   பேசியிலே   செய்யும்   நாமோ நற்காலம்   காட்டுகின்ற   கடிகா   ரத்தை நாள்காட்டி   கணக்கியினை   துறந்து  விட்டோம் பற்றியெங்கும்    எடுத்துசென்று   செய்தி   யோடு பாடல்கேட்ட   வானொலியைத்   தொலைத்து  விட்டோம் நற்றமிழில்   நலம்கேட்டு   எழுதி   வந்த நற்கடிதப்   பழக்கத்தை   விட்டு  விட்டோம் ! பக்கத்தில்   பெற்றோர்கள்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்   உடன்பிறந்தோர்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்   சுற்றத்தார்   அமர்ந்தி   ருக்கப் பக்கத்தில்  …

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 1/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று ! 1/5  தொலைபேசி  வருமுன்பு  நெஞ்சி   ருக்கும் தொலைதூர   உறவோடு   தொடர்பு  கொள்ள மலைகடந்து   பறக்கின்ற   புறாவின்   காலில் மனக்கருத்தைக்   கட்டியன்று   அனுப்பி  வைத்தார் அலைகடலைக்   கடந்தின்று   இருப்போ  ரோடே அறிவியலால்   மின்னஞ்சல்   முகநூல்   தம்மில் வலைத்தளத்தில்   கட்செவியில்   கையால்   தட்டி வார்த்தையாக்கிக்   கண்களிலே   பேசு   கின்றார் ! எத்தனைதான்   முன்னேற்றம்   வந்த  போதும் எழில்கிராமப்   பச்சைவயல்   அழகைப்   போல சித்தத்தை   மயக்குகின்ற   சேலை  தன்னில் சிரிக்கின்ற   அத்தைமகள்   முகத்தைப்  போல முத்தான  கையெழுத்தில்   அன்பைக்   கொட்டி முழுநெஞ்ச  …

பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு

பாவலர்  கருமலைத்தமிழாழன்  நூலுக்குப்  பரிசு  தேனி  மாவட்டம்  கம்பத்தில்  37  ஆண்டுகளாகச்   செயல்பட்டுவரும்  பாரதி தமிழ்  இலக்கியப்  பேரவை, ஒவ்வோர் ஆண்டும்  தமிழில்  வெளிவந்த  கவிதை  நூல்களில்  சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து  விருதும்,  பொற்கிழியும்  வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது.  2016  ஆம் ஆண்டில்  சூலை மாதம் வரை  வெளிவந்த  கவிதை  நூல்களில்  ஓசூரைச் சேர்ந்த  பாவலர் கருமலைத்தமிழாழன்  எழுதிய  ‘செப்பேடு’   மரபுக் கவிதை நூலை  இவ்வாண்டின் சிறந்த  நூலாகத்   தேர்ந்தெடுத்தது.  ஆடி 31, 2047 / 15 -08 – 2016  திங்களன்று. …

இமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன்

தில்லித்தமிழ்ச்சங்கத்தில்  கவியரங்கம் நாள் – ஆடி 02, 2047  / 17-07 -2016   இடம் – தில்லித்  தமிழ்ச்சங்கம் தலைப்பு – இமயம் முதல்  குமரி  வரை தலைமை – கவிஞர்  காவிரிநாடன் பாடும் கவிஞர் :   கருமலைத்தமிழாழன் தமிழ் வணக்கம் முத்தமிழே !    ஞாலத்தில்   முந்தி   வந்தே  கன்னியென   இலங்கு   கின்றாய் தித்திக்கும்    அமுதமெனச்   சுவையாய்   நாவில் திகழ்கின்றாய் !   முச்சங்கப்    புலவ   ராலே எத்திக்கும்   புகழ்மணக்கும்   ஏற்றம்   பெற்றாய் ! எழுந்துவந்தே   கடற்கோள்கள்    அழித்த   போதும் வித்தாக    முளைத்துநின்றாய் ! …

தீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்

தீவாக்கிய   அலைபேசி செல்லிடக்கை    அலைபேசி    என்றே    இன்று செப்புகின்ற   அறிவியலின்    பேசி   யாலே இல்லத்தில்    இருந்தபடி     உலகில்    எங்கோ இருப்பவரைத்   தொடர்புகொண்டு    பேசு   கின்றோம் செல்கின்ற     இடத்திருந்தே    வீட்டா    ரோடு செய்திகளைப்    பரிமாறி    மகிழு    கின்றோம் எல்லைகளை    நாடுகளைக்    கடந்தி   ருந்தும் எதிர்நின்று   பேசுதல்போல்   பேசு   கின்றோம் ! எழுத்தாலே    அனுப்பிவைத்த    செய்தி   தம்மை ஏற்றவகை    படங்களொடு    அனுப்ப   லானோம் கழுத்துவலி   எடுக்கமேசை    முன்ன   மர்ந்து கணிணியிலே    செய்கின்ற   பணியை  யெல்லாம் அழுத்திவிரல்    படுத்தபடி   சாய்ந்த   மர்ந்தும் அடுத்தஊர்க்குச்   செலும்போதும்   செய்ய   லானோம் பழுதின்றி  …