இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்! அரசென்றால்.. அது அப்படித் தான் இருக்க வேண்டும்! அடுப்படி விறகும் கூட எல்லார்க்கும் பங்கு வேண்டும்! உழைப்போர் பார்த்து உதவும் கரம் நீட்ட வேண்டும்! உதவாதார் கைகள் கட்டி திருத்தும் வழி கூறல் வேண்டும்! அகம்புறமும் ஒன்றாகப் பணியாற்றி நடக்க வேண்டும்! அடிபட்டோர் வாழ உதவிக்கரம் நீட்டிடல் வேண்டும்! தனக்கெனவே அலைவோரை தொலைவிலே நிறுத்த வேண்டும்! தக்கவரைப் பார்த்துத் தேடி முன்கொணர்ந்து நிறுத்த வேண்டும்! மண்மணமும் மாண்புகளும் தாளாது நடத்த வேண்டும்! மக்களெண்ணம் மகிழ்வதற்கே கேடுகளைக் கொய்ய வேண்டும்!…