ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்
ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல் இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல் இளைஞனே!…