தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு
(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார், ஆ. வீரமாமுனிவர்-தொடர்ச்சி) தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 3. செருமானியத் தமிழ்ச் சான்றோன் சீகன்பால்கு (1682-1719) கடற்கரை மணலில் கைவிரலால் எழுதிப் பழகி, அழகப்பன் உதவியுடன் எட்டே மாதங்களில் தமிழ் கற்ற சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg), அலைபாடிக் கலை வளர்க்கும் தரங்கம்பாடியில் பதின்மூன்று ஆண்டுகள் மாண்புமிகு தமிழ்ப் பணி புரிந்துள்ளார். நேர்மையாளருக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும் என்று கிறித்தவம் என்னும் நூல் வழியாக நவின்ற சீகன்பால்கு, தாய்மொழி வாயிலாகப் பிறமொழியைக் கற்று புலமைபெற…
உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா
உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா நிறுவனரின் 70ஆம் அகவை நிறைவுவிழா ஆவணி 03, 2048 சனி ஆகத்து 19.08.17 காலை 9.00 – மாலை 5.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்
பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் 1934ஆம் ஆண்டு உருவாக்கிய ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு செல்லப் பாண்டியன் தலைமையில் ‘மாநிலத் தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயருடன் திகழ்ந்தது. ‘பவள விழாக் கண்ட தமிழ்ச் சங்கத்தில்’ இருநூறு உறுப்பினர் செயலாற்றுகின்றனர். இரண்டாவது செவ்வாய்க் கிழமை தோறும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பில் திருக்குறள் ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெறும். காரி(சனி)க்கிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் திருக்குறள் ஒரு தொடர் சொற்பொழிவுகள்…