தமிழர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றுகிறார் செயலலிதா : கடலூரில் கருணாநிதி பேச்சு
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர்நந்தகோபாலக் கிருட்டிணனை ஆதரித்து கடலூரில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழக முதலமைச்சராக இருக்கிற அம்மையார் செயலலிதா, ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்தான் கவலைப் படுவதை போலவும் நமக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றிக் கவலை கிடையாது போலவும் பேசி வருகிறார். தி.மு.க வின் ஈடுபாடு தமிழ்ச்சமுதாயத்தை வாழவைக்க வேண்டும் என்பது ஒன்றுதான். செயலலிதா நம்மை எல்லாம் எந்த அளவிற்கு அவதிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதை நான் சொல்லாமலேயே பட்டறிவு மூலம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். வருகின்ற வழியெல்லாம் சிற்றூர்கள் தோறும்…
காங்கிரசு, பாசக அல்லாத ஆட்சியே இலட்சியம்: செயலலிதா பேச்சு
ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் செயலலிதா பேசியதாவது: பாச கவின் “ஆ” அணிதான் அதிமுக என்றும், பாசகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. . எங்களைப் பொருத்தவரை நாங்கள் யாருக்கும் “ஆ” அணி இல்லை. எங்கள் அணிதான் முதன்மையான அணி. காங்கிரசு, பாசக அல்லாத மத்திய ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் இலட்சியம். இதை 2012-இல் நடந்த அதிமுக பொதுக் குழுவிலேயே நான் அறிவித்தேன். இந்த இலட்சியம் நிறைவேற 40 மக்களவைத்…