முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், பிரித்தானியா, மேல் விவரம்

வைகாசி 04, 2050 சனி மே 18, 2019 நண்பகல் 2.00 மணி – மாலை 5.00மணி திருப்புமுனை சந்திப்பு / சேரிங்கு கிராசு / Charing Cross நிலக்கீழ் தொடரி நிலையம் அண்மையில் குகை முனைச் சதுக்கம் / திராபல்கர் சதுக்கம் / TRAFALGAR SQUARE இலண்டன் / London WC2N 5DN முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தாயக விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம்! அயராதுசெயல்படுவோம்! அனைத்து நாடுகைளயும் எம்பக்கம் திருப்புவோம்! தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தொடர்புகளுக்கு:  பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035,…

பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாள்

  பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும் சித்திரை 7, 2050 சனி 20.04.2019 மாலை 6.00 இலண்டன் சித்திரை 8, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 இலெசிசுடர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானியா

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க!

நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க!     தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன்  அழைப்பு விடுத்துள்ளார்.   எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…

பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

  தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை ஆவணி 31, 2047 / 16.09.2016 அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுக்கின்றது.

முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்புக் கொடுந்துயரநாள்

தமிழின அழிப்பு நாளின் ௭(7)ஆம் ஆண்டு நினைவு நாள்! – பிரித்தானியாவில் அணி திரளுங்கள்!   தமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை, பிரித்தானியத் தலைமையமைச்சரின் (பிரதமரின்) வீடான எண்: 10, இடவுனிங்கு வீதியில் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.   தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரித்தானியாவிடமும் பன்னாட்டு அரசுகளிடமும் தெரிவித்து, அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை ஐந்து…

தமிழர் திருநாள் 2016 பொங்கல் பெருவிழா,பிரித்தன்

தமிழர் திருநாள் 2016 – பொங்கல் பெருவிழா பிரித்தானியாவில்   தமிழர் திருநாள் 2016 / பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் [ Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re என்ற முகவரியில்]  நடை பெற உள்ளது. இவ் நிகழ்வில் தமிழ் வணிகர்களாகிய நீங்கள் உங்களுடைய…