போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும் இணைஉரிமையும் பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர் போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும் மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது. மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை…
ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்
சித்திரை 13, 2048 /புதன்/ ஏப்பிரல் 26, 2017 மாலை 6.00 இரசியப்பண்பாட்டு அறிவியல் மையக்கண்காட்சி அரங்கம் சென்னை 600 006 ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் தி.க.ச.கலைவாணனின் ‘மனைவி அமைவதெல்லாம்’ நூல் வெளியீடு விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கல்
பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
கார்த்திகை 11, தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954 அன்று தமிழாய்ப்பிறந்த தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்! தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் வீரம். தமிழ் என்றால் அன்பு. தமிழ்போல் இனிமையும் அழகும் வீரமும் அன்பும் கொண்டவரே தலைவர் பிரபாகரன். பிரபாகரன் பிறந்ததால்தான் உலகம் தமிழரின் வீரத்தை உணர்ந்தது! தமிழரின் செம்மையை அறிந்தது! தமிழ்ஈழம் இன்றைக்கு உரிமை இழந்து நிற்கலாம். ஆனால், நாளை மீண்டும் எழும்! மலரும்! தனியரசாய்த்…
பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்
பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்லர்! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர் தமிழ்மானம் தெளிந்தனர்! அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்! இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை! பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்! வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்! தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்! வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்! பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்கீந்த…