தொல்காப்பிய விளக்கம் 15 – பேராசிரியர் சி. இலக்குவனார்
(சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி) 3. பிறப்பியல் தமிழ் மொழிக்குரிய எழுத்தொலிகளைப் பற்றியும் அவை பயிலு மாற்றையும் முன் இரு இயல்களில் ஆசிரியர் தொல்காப்பியர் கூறினார். இனி அவை தோன்றும் முறை பற்றிக் கூறத் தொடங்குகின்றார். எழுத்தொலிகள் பிறக்கும் முறைபற்றி மேலை நாட்டு மொழி நூலார்களும் இந்நூற்றாண்டில் கூறத் தொடங்கியுள்ளனர். எழுத்துகளின் பிறப்பிடங்களைக் கொண்டே எழுத்துகளை, மிடற்றினம், பல்லினம், இதழினம், அண்ண இனம் என்றெல்லாம் பெயரிட்டுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு பெயரிடாது போயினும்,…