தமிழ்நாடும் மொழியும் 23: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 22 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 23 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் – இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும். முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல…
தமிழ்நாடும் மொழியும் 22: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 21 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 22 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி இவற்றோடு சோழப்படை நிற்கவில்லை. கங்கைக் கரைநோக்கிச் சோழப்படை விரைந்தது. இராசேந்திரன் செல்லவில்லை. சென்ற சோழப்படை, வங்கத்தை ஆண்ட மகிபாலன், கோவிந்த சந்திரன் ஆகிய இரு மன்னர்களையும் தோற்கடித்தது. பின்னர் கங்கை நீர் நிரம்பிய குடங்களைத் தோற்ற வட நாட்டு மன்னர்தம் தலை மீது சுமத்திச் சோழப்படை தென்னகம் திரும்பியது. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரம் இந்த வெற்றியின் நினைவாக உண்டாக்கப்பட்டது. கங்கைகொண்டான் என்ற விருதுப் பெயரும் சோழனுக்கு ஏற்பட்டது….
தமிழ்நாடும் மொழியும் 21: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 20 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 21 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும். முதல்…
தமிழ்நாடும் மொழியும் 20: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 19 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 20 6. பிற்காலச் சோழர் வரலாறு சோழர் எழுச்சி சங்கக்காலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ்க் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர்…