தோழர் தியாகு எழுதுகிறார் 65
(தோழர் தியாகு எழுதுகிறார் 64 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 65 இனிய அன்பர்களே! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நேற்று திறந்த மடல் எழுதினேன். அவர் உடனே விடையனுப்பினார்: “உயர்சாதியினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை அண்ணல் அம்பேத்துகருக்குச் செய்த துரோகம் என்றுதான் நான் கருதுகிறேன். நான் சார்ந்திருக்கும் தமு எகச இது குறித்து விரிவான அறிக்கை அப்போதே வெளியிட்டிருக்கிறோம் தோழரே. தங்கள் மடலுக்கு நன்றி.“ அவருக்கு நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். தமுஎகச அறிக்கையை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டேன். “தேடி அனுப்புகிறேன்…