இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு

1  பாரீசு கொடுமையைக் குறிப்பிடும்போது, ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘மென்மையான இலக்கு’ (SOFT TARGET) என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றைக் கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதைத்தலைவனை வழிக்குக் கொண்டு வர, அவன் குழந்தையைக் கடத்துகிற கயவனை(வில்லனை) எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு மென்மையான இலக்கு என்கிற சொல் புதிதன்று! அதுதான் இது!   பிரான்சுப் படுகொலைகளைத் தொடர்ந்து, கயவன் யார், கதைத்தலைவன் யார் எனவெல்லாம் அக்பர் சாலை ஏதிலியர்கள்(அகதிகள்) முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்….

அக்கினிக் குஞ்சினைத் தமிழினம் தாங்கட்டும்! – புகழேந்தி தங்கராசு

விடுதலையின் முகவரி நகர மறுக்கிற நதியென உறங்குகிற கடற்கரை – வல்வெட்டித்துறை. பேசும் அலைகளின்றி பேராரவாரமின்றி அமைதி காக்கிற அதன் மூச்சுபேச்செல்லாம் விடுதலைப் பெருமூச்சு. அந்தக் கரையில்தான் உயிரெழுத்தின் நீட்சியென அவதரித்தான் அவன்! அந்த ஆயுத எழுத்தின் உக்கிரத்தால்தான் அடங்கிக் கிடந்தது வக்கிர இலங்கை! பிரபாகரன் – என்பது ஒரு மனிதனின் பெயரில்லை… அது விடுதலையின் விலாசம்! எமது இனத்தின் அறுபதாண்டுக் கால அவல வரலாற்றில் பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் எழுதியது மட்டும்தான் பவள வரலாறு. கையில் ஏந்திய ஆயுதங்களுடன் அவர்கள் மெய்யில் தாங்கிய…

இராசபக்சவை வீழ்த்தியது எது? – திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு

  இராசபக்சவை வீழ்த்தியது எது?   “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….”  இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள்.  அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை…

புத்த வெறியல்ல… இரத்த வெறி! -புகழேந்தி தங்கராசு

புத்த வெறியல்ல… இரத்த வெறி!   பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது.    எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப்…

நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? – புகழேந்தி தங்கராசு

இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை   வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது.  சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற…

இனி என்ன ​செய்யப்​போகி​றோம் நாம்? – இனப் படு​கொ​லைக்கு எதிரானவர்கள் ​கேள்வி!

இனி என்ன ​செய்யப்​போகி​றோம் நாம்? இனப் படு​கொ​லைக்கு எதிரான ​ செய்தியாளர்கள், க​லைஞர்கள், வழக்கறிஞர்கள் குழு ​கேள்வி!   “தமிழ​ரைக் காப்பாற்றத் தவறிய ஆற்றல்கள் இலங்​கை​யைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்”? ​என்ற த​லைப்பில் கருத்தரங்கம் ஆவணி 27, 2046​13-09-2015 அன்று சென்​னை, மயிலாப்பூர் நகரமேம்பாட்டுக்கட்டளை நகரில் உள்ள கவிக்​கோ மன்றத்தில்       ந​டை​பெற்றது.   தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கத்தி்ல், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தனி ஈழம்     அமையவும், இலங்கையின் மீது     இனப்படுகொலை-போர்க்குற்றத்திற்கு எதிரான பன்னாட்டு விசாரணை…

ஒரு முறையாவது முத்தமிடவேண்டும்! – புகழேந்தி தங்கராசு

கதை எழுதுவதென்று முடிவெடுத்த கணத்தில் கண் முன்னே விரிந்ததெல்லாம் கண்ணீர்க்கதைகள்… எதை எழுதுவது? ஒருமுறைக்கு இருமுறை எண்ணிய பிறகுதான் எழுதுகிறேன் இதை! இது ஒரு விதையின் முகவரியை விவரிக்கிற முயற்சி… கவிதையென்றோ…. கதையென்றோ…. எப்படியாயினும் இதை அழைக்கலாம் நீங்கள்.. உண்மை – என்றே இதை விளிக்கிறேன் நான்! இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பதுங்குகுழிக்குள் இருக்க நேரும் அவலம் மட்டும் முடியவில்லை அவர்களுக்கு! முரசுமோட்டையிலிருந்து அம்பலவன்பொக்கணை வரை மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்… பதுங்குகுழிகள் மட்டும் மாறவேயில்லை! இடப்பெயர்ச்சி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு…