தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையில்லாப் பொங்கல் கொண்டாட விழிப்புணர்வு பரப்புரை   தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையிலையில்லாப் பொங்கல் கொண்டாடப்படவேண்டும்; எனப் பேரூராட்சி நிருவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவதானப்பட்டியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை நாளன்று கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், ஆகியவற்றை எரிப்பது பழக்கமாக உள்ளது. மேலும் தற்பொழுது புதுமை மயமாக்கலில் உருளை, தேய்வை, ஞெகிழி, செயற்கைப் பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சு…