சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி — ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014
தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014 ஆர்வலர்களுக்கு அழைப்பு தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர் பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின் அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப் பயன்படும். இதில் சிறுவர் பாடல் என்பது எப்படி இருத்தல் வேண்டும்? தனித்தமிழ்ச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது? சிறுவர்க்கான பாடுபொருள்கள் எவை? சிறுவர்க்கு…
புதுச்சேரி, மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்
67 ஆவது திங்கள் பாவரங்கம் திருக்குறள் பெருமாள் ஐயா நூற்றாண்டு தொடக்க விழா 15-11-1914 – 15-11-2014 ஆகியன 30.12.2013 அன்று நடைபெற்றன. நிகழ்ச்சியில் மரபுப் பா, கழக இலக்கிய அறிமுகம், புதுப் பா, மொழிபெயர்ப்புப் பா , துளிப்பா, சிறார் பாவரங்கம் நடைபெற்றன. – புதுவைத் தமிழ்நெஞ்சன்