தனித்தமிழ் இயக்கம் நடத்திய இலக்கிய விருந்தரங்கம்

ஆனி 17, 2045 / 1.7.2014 செவ்வாய் மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இலக்கிய விருந்தரங்கம் நடைபெற்றது. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அவ்விழாவுக்கு ஆசிரியர் சோ.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். த. தமிழ்த்தென்றல் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுமி சா.கலைமதி நடன மாடினார். த.தமிழ்நேயன் சிறுவர் பாடல்கள் பாடினார். புலவர் சிவ.இளங்கோவன்,புலவர் இ.பட்டாபிராமன் ஆகியோர் இலக்கியச்சுவைபற்றிப் பேசினர். சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் தனித்தமிழ் அறிஞர் க.தமிழமல்லன் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாவரங்கில் பாவலர்கள் தேவகிஆனந்து,…

உத்தமம் தலைவர் முனைவர் வாசு ரெங்கநாதன் தமிழகத்தில்

உத்தமம்(INFITT) எனச் சுருக்கமாக அழைக்கப் பெறும் உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இது குறித்து முன்னேற்பாடுகளைப் பார்க்கவும் உத்தம உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் இதன்தலைவர் முனைவர் வாசுரெங்கநாதன் தமிழ்நாடு வந்துள்ளார். புதுச்சேரிக்கும் செல்கிறார். ஆனி 07, 2045  / 21.06.14 அன்று சென்னையில் அவர் கருத்தறிவு நிகழ்ச்சி நடந்த பொழுது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள். இதில் மலேசியாவில் இருந்து – 12 ஆவது…

முனைவர் நா.இளங்கோவுக்குப் பாவேந்தர் விருது.

புதுச்சேரி, சங்கரதாசு சுவாமிகள் இயல் இசை நாடகசபாவின் 174 ஆவது மனோன்மணீய நாடக வைர – பொன் விழாவில் ( ஆனி 1, 2045 / 15-06-2014) புதுச்சேரி பட்ட மேற்படிப்பு மைய இணைப் பேராசிரியரான முனைவர் நா.இளங்கோ அவர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. விருதளிப்பு மேனாள் நீதிபதி சேது.முருகபூபதி. உடன் பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு.

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை – தொகுதி வாரியாக

வடசென்னை  40 தென்சென்னை 42 மத்திய சென்னை  20 திருப்பெரும்புதூர்  21 காஞ்சிபுரம்  11 அரக்கோணம்  24 வேலூர்  24 கிருட்டிணகிரி  24 திருவண்ணாமலை  24 ஆரணி 19 சேலம்  25 நாமக்கல்  26 திருப்பூர்  26 நீலகிரி  10 கோவை  25 திண்டுக்கல்  18 கரூர்  25 திருச்சி  29 பெரம்பலூர்  21 கடலூர்  17 சிதம்பரம்  15 நாகை  9 தஞ்சை  12 சிவகங்கை  27 மதுரை  31 தேனி  23 விருதுநகர் 26 இராமநாதபுரம்  31 தூத்துக்குடி  14 தென்காசி…

தமிழர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றுகிறார் செயலலிதா : கடலூரில் கருணாநிதி பேச்சு

  கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்  மருத்துவர்நந்தகோபாலக் கிருட்டிணனை ஆதரித்து கடலூரில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழக முதலமைச்சராக இருக்கிற அம்மையார்  செயலலிதா, ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்தான் கவலைப் படுவதை போலவும் நமக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றிக் கவலை கிடையாது போலவும்  பேசி வருகிறார். தி.மு.க வின் ஈடுபாடு தமிழ்ச்சமுதாயத்தை வாழவைக்க வேண்டும் என்பது ஒன்றுதான். செயலலிதா நம்மை எல்லாம் எந்த அளவிற்கு அவதிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதை நான் சொல்லாமலேயே  பட்டறிவு மூலம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.  வருகின்ற வழியெல்லாம்  சிற்றூர்கள் தோறும்…

சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி — ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014

தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014 ஆர்வலர்களுக்கு  அழைப்பு     தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர் பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின் அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப் பயன்படும்.   இதில் சிறுவர் பாடல் என்பது எப்படி இருத்தல் வேண்டும்? தனித்தமிழ்ச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது? சிறுவர்க்கான பாடுபொருள்கள் எவை?  சிறுவர்க்கு…

புதுச்சேரி, மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்

67 ஆவது திங்கள் பாவரங்கம் திருக்குறள் பெருமாள் ஐயா நூற்றாண்டு தொடக்க விழா 15-11-1914 – 15-11-2014 ஆகியன 30.12.2013  அன்று நடைபெற்றன. நிகழ்ச்சியில் மரபுப் பா, கழக இலக்கிய அறிமுகம், புதுப் பா, மொழிபெயர்ப்புப் பா , துளிப்பா, சிறார் பாவரங்கம் நடைபெற்றன.  – புதுவைத் தமிழ்நெஞ்சன்