சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!
தமிழ்த் தேசியப் போராளித் தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31. தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே…