பூவரசி விருதுகள் வழங்கு விழா, சென்னை
சென்னை பூவரசி அறக்கட்டளை, பூவரசி ஊடக நிறுவனங்களின் சார்பாகப் பூவரசி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது . இலக்கியம், இசை, சமூகத் தொண்டு போன்ற பிரிவுகளில் சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன. இலக்கியத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறப்பாகச் சேவை செய்துவருவதைப் பாராட்டிப், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் கவிஞர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியனுக்குத் திரைப்பட இயக்குநர் மீரா.கண்ணன் ‘பூவரசி மக்கள் விருது’ வழங்கினார் விழாவில் நடிகர் சாருகாசன், இயக்குநர் சனநாதன், எழுத்தாளர் பிரபஞ்சன், புதுவைத்…
புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மகளிர் விழா, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். விழாவில் பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர் புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு துணைச்செயலர்…
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்குச் சமூக இலக்கியச் சுடர் விருது
புதுவைக் கவிதை வானில் கவிமன்றம் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அவரின் சமூக, இலக்கிய பணிகளைப் பாராட்டிச், சமூக இலக்கியச் சுடர் விருது வழங்கப் பட்டது. விருதினை புதுச்சேரி காவல்துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் முனைவர் சந்திரன் வழங்கினார்கள். உடன் கவிதைவானில் கவிமன்ற நிறுவனர் திருமதி கலாவிசு, புலவர் இரெ.சண்முவடிவேல், கவிஞர் பைரவி தொழிலதிபர் கணேசன் ஆகியோர் உள்ளனர்
புதுவைத் தமிழ்ச் சங்கம் : மகளிர் நாள்
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மகளிர் நாள் விழா விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கத்தில் புதுவைப் பல்கலைக் கழக தமிழியல் துறைத் தலைவர் முனைவர் இளமதி சானகிராமன், புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன், புதுவை குழந்தைகள் நலக்குழுத் தலைவர் முனைவர் வித்யா இராம்குமார், புதுச்சேரி வாழும் கலை ஆசிரியர் எம்.தையல்நாயகி ஆகியோர் கருத்துரை வழங்கினர். துணைத்தலைவர்கள்…