மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா
பங்குனி 18, 2053 வெள்ளி 01.04.2022மாலை 6.00முத்தமிழ்ச்சங்கம், புதுவைமும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாபுதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை
புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் – பகுத்தறிவாளர் கழகம், புதுவை தமிழ்நாடு
ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது. இந்த ஆயி மண்டப முகப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காரை விழுந்து சேதமடைந்ததால் சரிசெய்ய பாெதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டது. ஒப்பந்தக்காரர் மூலம் பணிகள் மேம்போக்காக அரைகுறையாகச் செய்யப்பட்டதன் விளைவாக ஒட்டப்பட்ட காரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது. இதற்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று…
புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3
புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3 புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் ஆற்றி வருகிறார். சித்திரை 30, 2049 / 13.5.2018 அதன் மூன்றாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் இரண்டாம் காண்டத்தில் அமைந்துள்ள படலங்களின் பொருள்பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர் நெ.நடராசன்…
பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்
பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது. தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும்…
புறநானூற்றில் நிதி மேலாண்மை – அ.அறிவுநம்பி
(புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர் அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள் நல்ல தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது – ஆசிரியர் ) [நினைவுக்குறிப்பு: ‘சித்தர் இலக்கியம்’ குறித்தப் பன்னாட்டுக்…
இன்குலாபு புகழஞ்சலிக்கூட்டம், புதுவை
மார்கழி 15, 2047 வெள்ளி 30.12.2016 மாலை 6.00
புதுச்சேரி, சித்தர் இலக்கியப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள்
புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெற்ற “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள் தொகுதி 01 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
புறப்படு புறப்படு பேய்மழையே! – மு.பாலசுப்பிரமணியன்
புறப்படு புறப்படு பேய்மழையே! வா வா மழையே என்றழைத்தோம் வந்து கொட்டித் தீர்க்கின்றாய் சாவா வாழ்வா நிலை எமக்கு சற்றே பொறுக்க மாட்டாயா? போய்வா என்றே சொல்கின்றோம் புறப்படு புறப்படு பேய்மழையே! தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார் தாமதம் இனியும் ஏன் மழையே ஊடகம் முழுதும் உன்னாட்சி உயிருக்கு போராடும் நிலையாச்சு நாடகம் ஏனோ பேய்மழையே நலங்கெட பெய்தல் முறையாமோ? எங்கே பேரிடர் என்றாலும் எங்கள் மக்கள் உதவிடுவார் இங்கே வெள்ளம் சூழ்கையிலே எங்கே போவார் எம்மக்கள்? இயற்கையே சீற்றம் குறைத்துவிடு இனியும் வேண்டாம் விளையாட்டு…
துளிப்பா நூற்றாண்டு விழா, காரைக்கால்
சாகித்ய அகாதெமி காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரி ஐப்பசி 17, 2046 / நவ.03, 2015
புதுவையில் புத்தகக் கண்காட்சி – இலக்கியம் & காலச்சுவடு
ஆனி 17 – ஆடி 15, தி.ஆ. 2045