புதுச்சேரி-காரைக்கால் வரலாறு : ஒருநாள் பயிலரங்கு

  ஆடி 23, 2045 / ஆக.8, 2014     காரைக்கால், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வரும் ஆடி 23, 2045 -8-8-2014 வெள்ளியன்றுபுதுச்சேரி -காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.பயிலரங்கை ஒட்டி அரிக்கமேடு அகழ்வாய்வுத் தடயங்கள் குறித்த அரியகண்காட்சியும் நடைபெறவுள்ளது. வரலாற்று ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் தவறாது பங்கேற்றுச் சிறப்பிக்கவும். அழைத்து மகிழும்: முனைவர் நா.இளங்கோ, முதல்வர் (பொ), அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி.      

புது இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா

  புது இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா லிட்டில்டன், மச்சசுசீத்சுசில் பிப்ரவரி 09 ஆம் நாள் இனிதே கொண்டாடப்பட்டது. இயல், இசை, நாடகம் என சின்னஞ்சிறார் மட்டும் அன்றிப் பெரியவரும் பங்குபெற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிசுபாரதி மாணவர்கள் மூலம்,’கல்வியின் சிறப்பை’ எடுத்துரைக்கும் வகையில் நாடகத்தை இயற்கையாகவும் நகைச்சுவையுடனும் நையாண்டி பாடல்களோடு எழுதி வடிவமைத்திருந்தார் உமா நெல்லையப்பன். இனியா,  (இ)லையா, அசுமிதா,அட்சயா, கேசவு, சூரியா, சனனி,அமியா, வர்சிணி, சிந்து,அரிணி,அம்சா, சஞ்சனா ஆகியோர் பங்கேற்று, திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் ஆகியோரின் கல்வி தொடர்பான கருத்துகளை மேற்கோளாக எடுத்துரைத்துச்…