ஆதி நீஇ ! அமலன் நீஇ !
ஆதி நீஇ ! அமலன் நீஇ ! ஆதி நீஇ ! அமலன் நீஇ ! அயனும் நீஇ ! அரியும் நீஇ ! சோதி நீஇ ! நாதன் நீஇ ! துறைவன் நீஇ ! இறைவன் நீஇ ! அருளும் நீஇ ! பொருளும் நீஇ ! அறிவன் நீஇ ! அநகன் நீஇ ! தெருளும் நீஇ ! திருவும் நீஇ ! செறிவும் நீஇ ! செம்மல் நீஇ ! வீரசோழியம்…
காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? – செந்தமிழினி பிரபாகரன்
காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? எங்கள் தமிழீழ மண்ணில் எமக்காக ஈகைச் சாவெய்திய தமிழக தொப்புள் கொடி உயிர் கொடுத்த தோழர்களான முத்துக்குமார் முதலான ஈகியர்களுக்குச் சிலை இல்லை. மண்ணில் நின்று போராடி வீரச் சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவாலயங்கள் வைக்கத் தடை. இருந்த மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டு விட்டன.. மாமனிதர் இரவிராசு சிலை ‘மாமனிதர்’ என்ற பட்டம் நீக்கப்பட்டு அரச விசிறிகளால் அவமானப்படுத்தப்படுகின்றது. ‘அடங்காப்பற்று’ என வன்னி மண்ணை அயலவரோடு போராடிக் காப்பாற்றி…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463) இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…
அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்
அசோகர் காலமே வள்ளுவர் காலம் வள்ளுவர் காலம் சங்கக் காலம் என்றோம். சங்கக் காலப் புலவர்களில் பலர் இவருடைய திருக்குறளை எடுத்தாண்டுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனார் “தெய்வம் தொழான் கொழுநன் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை என்ற பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” என்று கூறுகின்றார். இதில் வள்ளுவர் மொழியை எடுத்தாண்டு அவரைப் பொய்யில் புலவர் என்று பாராட்டுவதையும் காண்கின்றோம். அதனால் வள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு முற்பட்டவர் என்று அறிகின்றோம். சாத்தனார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும்…
அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்
அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே. ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர். “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை…
புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே!
கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். – குறள்நெறி: ஆனி 32, 1995 / 15.07.64