(தமிழ்த்தாய் வணக்கம் 16-20  தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 21-23   பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீறா துறாரே தெளிவு (21)   நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. (22)   அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே றொன்றும் கொளாதென் உளம். (23) –பாவலர்…