தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 / 24-4-2017 அன்று சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன் அரங்கில், புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ என்ற நூலை மாண்புமிகு நீதியரசர் வள்ளிநாயகம் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். முனைவர் பெ. அருத்தநாரீசுவரன், முனைவர் சரசுவதி இராமநாதன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர். கிருட்டிணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்ந்துரை நல்கினர். முனைவர் கோ பெரியண்ணன் தலைமையுரை ஆற்றினார். முனைவர் உலகநாயகி பழனி நிரலுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.
தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 திங்கள் ஏப்பிரல் 24, 2017 மாலை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004
இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்
மார்கழி 19, 2047 செவ்வாய் சனவரி 03, 2017 மாலை 6.30 இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல் தமிழ்நிதி விருது பெறுநர்: புலவர் தி.வே.விசயலட்சுமி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு! – புலவர் தி.வே. விசயலட்சுமி
வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு! ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இக்காப்பியத்தில் 66 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தி, சிலப்பதிகாரம் முதலிய சில நூல்களின் உரையில் இதிலுள்ள சில பாடல்கள் காணப்படுகின்றன. காப்பியக் காலத்தில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. நவகோடி நாராயணன் என்ற வைசியன் வேறுகுலப் பெண்ணை மணந்து கொள்கிறான். அதனால் அவனைச் சார்ந்தோர் வெறுக்கவே, மனைவியை விட்டு அயல்நாடு சென்று விடுகிறான். அந்தப் பெண்ணுக்குப் பிறந்த…
தமிழ்க்கூடல் தனிப்பாடல் – நிறைவு நிகழ்ச்சி
கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 மயிலாப்பூர், சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : புலவர் தி.வே.விசயலட்சுமி இராம.வீரப்பன் அறிஞர் அரங்கம் : தாவீது (டேவிட்) பிரபாகர் இளைஞர் அரங்கம் : சி.நிகமானந்த(சருமா) இலக்கியவீதி இனியவன் சென்னைக் கம்பன்கழகம் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம்
நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று! – புலவர் தி.வே.விசயலட்சுமி
நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று “ தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” (குறள்-129) தீயினாற் சுடப்பட்டு உண்டான புண் வடுவாக இருப்பினும் மனத்தில் ஆறிவிடும். நாவினாற் சுட்ட வடு மனத்தி லென்றும் ஆறாது என்பது இக்குறட்பாவின் கருத்து. கழிந்த காலமும், விடுத்த அம்பும், சொன்ன சொல்லும் திரும்பிப் பெற முடியாது என்பதும் உண்மையே ‘யாகாவாரயினும் நாகாக்க’ என்பது குறள் நீதி. ஒருவன் நண்பன்தான். தன்னை மறந்து கடுஞ்சொற்கள் பேசி விடுகிறான். சில மணித்துளிகளில் நிலைமைக்கு வந்து மன்னிப்புக்…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 16.பெருவாழ்வு வேண்டின் குறள்நயம் பேணித் திருவுடன் வாழ்தல் திறம். 17.வாழ்வாகி மெய்யாய் வளரொளியாய் நெஞ்சினில் வாழும் குறளை வழுத்து. 18. தேடுகின்ற மெய்ப்பொருள் யாவும் குறள்நூலில் ஓடிவந்து நிற்கும் உணர். 19. வள்ளுவன்சொல் ஓவியம் வண்ணமாய்த் தீட்டுவார் தெள்ளிய நெஞ்சுடை யார். 20. எப்பாலும் ஏற்கும் எழிலான இன்குறளைத் தப்பாமல் கற்போம் தெளிந்து. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15: தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 குன்றாப் புகழும், குறையா வளமும் என்றும் குறளால் வரும். இசைபட வாழ்ந்திட இன்குறள் ஆய்வோரைத் திசையெலாம் வாழ்த்தும் தெரிந்து. பொருள்நலம் பெற்றுப் பொலிந்திடும் இன்குறள் இருளற ஓதுவோம் இனிது. முக்கனிபோல் பாநயத்தை மகிழ்ந்து சுவைத்திடின் எக்காலும் வாழ்வோம் இனிது. முப்பாலே தித்திக்கும், முக்கனியாய்ச் சொல்லினிக்கும் எப்போதும் ஏத்துவம் ஏற்று. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி -98415 93517.
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10 நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் விழைந்து. குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள், திறனை அறிவோம் தெளிந்து. போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு. குறள்நெறி பேணின் குறையா வளங்கள் திறம்படப் பெறுவோம் தேர்ந்து. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால் வெல்வோம் விதிப்பயனை நாம். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5: தி.வே.விசயலட்சுமி
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! பொய்தீர் ஒழுக்க நெறிபுகன்ற வள்ளுவனார் செய்தார் குறள்நூல் செறிந்து. குற்றமிலா வாழ்நெறியைக் கூறும் குறள்நூலைப் பற்றியே வாழ்வோம் பணிந்து. எம்மொழிக்கும் இல்லாத ஏற்றமிகு இன்குறளால் செம்மொழிக்குச் சேரும் சிறப்பு. வேதத்தின் வித்தாய் விளங்கும் குறளமுதின் நீதியை நெஞ்சே நினை. வள்ளுவர் உண்மையை விள்ளுவர் பொய்ம்மையைத் தள்ளுவர் சீர்அள் ளுவர். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 – 10)
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல் தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…
சமுதாயம் அன்றும் இன்றும் – தி. வே. விசயலட்சுமி
சமுதாயம் அன்றும் இன்றும் மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே -என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக…