வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து   விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது.   தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம் என்றும், தான் ஒருபோதும் பதிவு செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதனை அவர் தனது அரசியல்தந்திரமாக நினைத்திருக்கலாம். ஆனால் அவரது இக்கருத்தை மக்கள் எந்தளவிற்கு ஏற்பார்கள் என்பதும்…

“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா

‘செல்லமே’ மாத இதழ் சார்பில் 2014 ஆம் ஆண்டிற்கான “செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.   தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது.  இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக்…

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்!     “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….

மோடி சொல்லிவிட்டார் – கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிப்போட்டுஇருங்கள்!

“ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.” இது எப்படி இருக்கிறது? சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இது உங்கள் எல்லோருக்கும் இதில் உடன்பாடு தானா? இப்போது விளங்குகிறதா ஏன் ஈழத்தின் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்கள் ”சுத்த வீணான மனுசர் சம்பந்தன்” என்று ஒருமுறை வெளிப்படையாக மதிப்பிட்டார் என்று? இந்தியா சொல்லும்,” கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவிப்…