பூங்கொடி 7 – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக
(பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர்காதை தொடர்ச்சி) ஒற்றுமை பரப்புக எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே. வாழிய வாழிய காரினம் மழையைக் கரவா தருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’ என்னுமிவ்…
பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர் காதை
(பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம் தொடர்ச்சி) 1. விழாவயர் காதை தமிழகச் சிறப்பு அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ் தரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா வீரங் கெழுமிய காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது ; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்த நன்னாடு; ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என் றோதி ஓதி உயர்ந்ததோ…
பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம்
(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி) தமிழ்த் தெய்வ வணக்கம் தாயே உயிரே தமிழே நினை வணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலை யென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்…
பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம்
(பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும் – தொடர்ச்சி) பூங்கொடி – கதைச் சுருக்கம் தமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது; பொங்கற் புதுநாள் அனைவ்ர் உள்ளத்தையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பகலும் இரவும் கலை நிகழ்ச்சிகள் சிறப் புற்றாேங்கின. ஆனல், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசையரங்கேற வாராமையால் ஊரார் பலவாறு பேசினர். இதனால் வருந்திய வஞ்சி, தன்மகள் அருண்மொழிக்குத் தேன்மொழி வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். மலையுறையடிகளுடைய குறளகத்திற் சேர்ந்த அவள் இத் துறையையே வெறுத்து வாராது நின்றனள். அருண்மொழி தன்…
பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும்
(பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை – தொடர்ச்சி) பூங்கொடி 3 : பதிப்புரை உலகில் பிறந்தவருட் சிலர், அவர் தம் நாட்டை, மொழியைக் காக்க உடல், பொருள், ஆவியை ஈந்துள்ளனர் என்பதை உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் தமிழ்நாடும் குறைந்ததன்று என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்று எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம். அந் நிகழ்ச்சிகளில் நினைவூட்டுவன சில; உணர்ச்சி யூட்டுவன சில; மறைந்தன பல. ஆனால், மறக்க முடியாதன சில வுள. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளத்திற் கொண்டு உணர்ச்சி குன்றா…
பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை
(பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன் – தொடர்ச்சி) புகழ்மாலை (பூங்கொடி வெளியீட்டு விழாவில்-1964) இன்று நாட்டிலுள்ள நிலையை-தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களை, பேராசிரியர்களை, அரசியல் தலைவர்களை, அறிஞர்களை, நாவலர்களை, கலைஞர்களை வெவ் வேறு பெயர்களால் காட்டுகிறது. பூங்கொடி. பண்டாரகர் அ. சிதம்பரநாதனார் எம்.ஏ.,பி.எச்.டி. தமிழ் வாழ, தமிழர் குறிக்கோள் வாழ வழி காட்டுகிறது பூங்கொடி. பண்டாரகர் மா. இராசமாணிக்களுர் எம்.ஏ.,பி.எச்.டி. ஆற்றொழுக்கனைய கவிதை யோட்டமும் ஆழ்ந்த கருத்துச் செறிவும் நிறைந்த காப்பியம் பூங்கொடி. அறப்போர்க்கும் மறப்போர்க்கும் விளக்கங்கரும் வரிகள் இதனை உறுதிப்படுத் தும். ஆருயிர்…
பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன்
பூங்கொடி முகப்புப் பாடல் பூங்கொடி கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் வரலாறு பேசுமொரு காப்பியமாம். பூங்கொடி மொழிகலங் கேடுறக் கண்டுளந் தளர்ந்தாள் விழிநலங் குறைவது போலவள் உணர்ந்தாள். உணர்ச்சி எழுச்சியாயிற்று – எழுச்சி வளர்ச்சியாயிற்று: அவள் வாழ்வே ஓர் அறப்போராயிற்று. முடிவு? செந்தமிழாம் மொழிகாக்கத் தனைக்கொடுத்தாள் செயிர்தீர்ந்த மொழிப்போரில் உயிர்கொடுத்தாள். அதனால் எங்கள் உடலுங் குருதியும் அவளானாள் உளத்தில் கொதிக்கும் அழலானாள் மூச்சும் பேச்சும் அவளானாள் மும்மைத் தமிழின் அணங்கானாள். அவள் வரலாறு கூறும் இப்பெருங்காப்பியம் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பேழை…