பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்
(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி) பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை? மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே 25 தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ; நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக் கவலை அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30 பூம்பொழில் தந்திடும்…