குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம்
பெண்களுக்கான குழந்தை வளர்ப்பு இணைய வழிப் பயிலரங்கம் பிப்.11-16, 2022 பதிவுக்கட்டணம் உரூ.499/- தொடர்பிற்கு: 75982 33858 ; 93455 53486 தகவல்: முதுவை இதாயத்து துபாய் 00971 50 51 96 433 muduvaihidayath@gmail.com
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 2/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 3/6 பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே! பெண்மைக்கு எதிராக எங்குக் களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம்…
திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார் மனைவியை வாழ்க்கைத்துணை என முதல்முதலாக அழைத்தவரும் அவரே! கணவனும் மனைவியும் நண்பர்போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே.ஒருமை மகளிரேபோல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக்கூறினார். – பேராசிரியர் சி.இலக்குவனார், திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர் : குறளமுதம் பக்கம் 524