தோழர் தியாகு எழுதுகிறார் 94 : பதிவுகள் தளத்தில் செவ்வி .1
(தோழர் தியாகு எழுதுகிறார் 93 : இறையூர் இழிவு – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 1 உங்களில் தோழர் யமுனா இராசேந்திரனைப் பற்றி அறியாதவர்கள் இருத்தல் அரிதே.2000ஆம் ஆண்டு நான் இலண்டன் சென்றிருந்த போது அவர்தாம் என்னை ஐகேட்டு கல்லறைக்கு(Highgate Cemetery) அழைத்துச் சென்று “இதோ உங்களவர், போய்க் கொஞ்சுங்கள்”என்று காரல் மார்க்குசிடம் கொண்டுபோய் விட்டு சுட்டுத் தள்ளியவர். 2003ஆம் ஆண்டு யமுனா சென்னை வந்திருந்த போது என்னிடம் ஒரு நீண்ட செவ்வி கண்டார். இனிய நண்பர் விசுவும் துணைக்…