கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார்.   …

நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னனுக்கு அறிவுறுத்திய புலவர்: இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 3 நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே! – புறநானூறு 165– திணை : பாடாண் திணை– துறை : பரிசில் விடை– பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.– பாடப்பட்டோன் : குமணன். 15 அடிகள் கொண்ட புறநானூறு 165 ஆம் பாடலின் முதலிரு அடிகளே இவை. இவ்வுலகம் நிலையில்லாதது. நிலையில்லா உலகில் நிலைபெற வேண்டின் புகழை நிலைநிறுத்த…

பெருந்தலைச் சாத்தனார்: 5 : ந. சஞ்சீவி

(பெருந்தலைச் சாத்தனார் 4 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 23 3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி) இவ்வாறு சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ந்து இனிதிருந்த சாத்தனார் சில காலம் கழித்துச் சங்கம் நிறுவிச் செந்தமிழ் புரக்கும் மாடமலி கூடல்மாநகர் காண விழைந்தார்; அவ்வாறே தொல்லாணை நல்லாசிரியர் கூடியிருந்து தமிழாய்ந்து வந்த அப்பழவிறல் மூதூரை அடைந்தார்; அவண் இருந்த சான்றோர்களுடன் உவப்பத் தலைக்கூடி, பன்னாள் இன்புற்றிருந்தார்; பின்னர்த் தம் ஊர் திரும்பும் வழியில் பாண்டியர் படைத்தலைவனும், கோடை மலைக் கிழவனும், வேளிர்…

பெருந்தலைச் சாத்தனார்: 4 : ந. சஞ்சீவி

(பெருந்தலைச் சாத்தனார் 3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 22 3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி)   ‘பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்கழிநல் குரவே தலை.’         (குறள், 657) எனும் மறைமொழி அறியாதவரா நம் புலவர் பெருமானார்? கடல் போலக் குமுறிய புலவர் நெஞ்சில் கருத்து மின்னல் ஒன்று மின்னியது. அம்மின்னல் ஒளி அவர்க்கு ஒரு நல்வழி காட்டியது. எழுச்சி கொண்டார் புலவர். உணர்ச்சிக் கடலாயிருந்த அவர் உள்ளம் உறுதி மலை யாயிற்று. அவர்…

பெருந்தலைச் சாத்தனார்: 3 : ந. சஞ்சீவி

(பெருந்தலைச் சாத்தனார் 2 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 21 3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி) குமணனது நாடுற்ற சாத்தனார் கண்களும் கருத்தும் ஏமாற்றமடைந்தன. அவர் காவிரி நீரைக் காண வந்த இடத்துக் கானல் நீரைக் கண்டார்; அரிமா வீற் றிருக்குமென ஆவலுடன் காண விழைந்த அரியணையில் நரிமா அனைய நெறி யில்லான் இருப்பது கண்டார். ‘அறத்திற்கும் அருளுக்குமோ வீழ்ச்சி! மறத்திற்கும் கயமைக்குமோ வெற்றி! இக்கொடுமைக்குத் தமிழகத்திலோ இடம்!’ எனக் கொதித்தார்; தம்மை -தம் குடும்பத்தை – வாட்டி வதைக்கும்…

பெருந்தலைச் சாத்தனார்: 2 : ந. சஞ்சீவி

பெருந்தலைச் சாத்தனார்: 2 : ந. சஞ்சீவி (பெருந்தலைச் சாத்தனார் 1  : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 20 3. பெருந்தலைச் சாத்தனார்(தொடர்ச்சி) அந்நாளில் பாணரும் பாடினியரும், கூத்தரும் விறலியரும் தம் கலைத்திறனால் தமிழகத்தை இசையும் கூத்தும், பண்ணும் பாட்டும் நிறைந்த கலைக்கோயிலாய்த் திகழும் வண்ணம் செய்தனர். அவர்கள் வாழ்வு துன்பம் கண்டிலது. அவர்கள் கையிலும் கருத்திலும், நாவிலும் நெஞ்சிலும் கலையரசியின் களி கடமே சிறந்து விளங்கியது. கலை வளர்த்த அச்செல்வர்கள் வீட்டிலும் வாழ்விலும் இன்ப நடனம் இடையறாது நிகழும்…

பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி

பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி (சங்கக்காலச் சான்றோர்கள் 18:  : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 19 3. பெருந்தலைச் சாத்தனார் ‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி’ நடக்கும் காவிரித்தாயின் கருணை வளம் கொழிக்கும் சோழ நன்னாட்டிலுள்ள பழமை பொருந்திய ஊர்களுள் ஒன்று ஆவூர். அவ்வூரின்கண்  மூலங்கிழார் என்ற பெயர் படைத்த சங்கச் சான்றோர் ஒருவர் இசைபட வாழ்ந்திருந்தார். தமிழகம் எங்கணும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு அருந்தவப் பயனாய்த் தோன்றினார் ஓர் அருந்தமிழ்ச்…