செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்
செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டையில் இருந்தாலும் தலைநகரில் உள்ள வசதியான பள்ளி போன்று மாணவர்களை இற்றைநாள்(up to date) விவரம் அறிந்தவர்களாக ஆக்குவதிலும் கல்வியுடன் பிற துறை நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதிலும் முன்னணியில் உள்ளது. எனவே, இன்றைய தலையாயச் சிக்கலான செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 உரூபா, 1000 உரூபாய் பணத்தாள்களை மாற்றுவது எப்படி என்று விளக்கி உள்ளனர். இக்கூட்டத்தில் பள்ளி மாணவர் விசய் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை…
மாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் நந்தகுமார் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்நாள் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் தனலெட்சுமி, இரஞ்சித்து, உமா மகேசுவரி , சீவா, பரமேசுவரி, பார்கவி இலலிதா, இராசேசுவரி, நித்திய கல்யாணி, காயத்திரி ஆகிய மாணவர்களுக்கும், இரோசிமா…
தேவகோட்டையில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவி சக்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண் தானம் ஏ.சி. அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் கண்தானம் குறித்துப் பேசுகையில், “இந்தியக் கண் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கைக்கிணங்க நமது நாட்டில் நூறாயிரக்கணக்கானவர்கள் கருவிழி குறைபாட்டால் பார்வையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் அகவையினர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் கண்தானம் பெறப்படுகிறது. நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற…
தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்!
தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்! ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி! ஆங்காங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல். தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்காங்கு நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்க் குமுகத்தின் (சமூகத்தின்) புள்ளியுமான மு.இராமநாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆங்காங்கு நாட்டில் பதிவு பெற்ற…
தேவகோட்டை, மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில்ஊர்தி
தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் ஊர்தி மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகத்தியா அறக்கட்டளையும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அறிவியல் ஊர்தி யில் துணைக்கருவிகளைக் கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி ஆய்வு மூலம் சென்னையைச் சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார். வளிமண்டலக் காற்று, காற்றின் அழுத்தம், காற்றின்…
கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்!
கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்! அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர்! முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர்! வராததை வரவழைத்த வெற்றி மனிதர்! கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும்! அதற்கான செயலும் இருக்க வேண்டும்! உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்! நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான்! – இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு …
தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ளிமாணவி வெற்றிப்பேறு !
தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ளிமாணவி வெற்றிப்பேறு தேவக்கோட்டை : தேசிய வருவாய் வழி – திறன் தேர்வில் தேவக்கோட்டைபெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று அருவினை ஆற்றினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேசிய வருவாய் வழி-திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்பிரவரி மாதம் நடந்தது. தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு…
தேசிய வாக்காளர் நாள் விழா, தேவகோட்டை
தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் சார் ஆட்சியர் கலந்துரையாடல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாட்டத்தில் 100 விழுக்காடு வாக்களிக்க ஆவன செய்வதே தேசிய வாக்காளர் நாளின் நோக்கம் எனத் தேவகோட்டை சார் ஆட்சியர் பேசினார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் விழாவில் கலந்துகொண்டோரை வரவேற்றார். தேவகோட்டை சார் ஆட்சியர் மரு.ஆல்பி…
மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி : தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு திருச்சிராப்பள்ளி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம்சார்பில்மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தன. இதில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுத் தேர்வு எழுதினர். இப்போட்டிகளில்பங்கேற்றுத் தேர்வு எழுதியதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நான்குபிரிவுகளில் பரிசுகள் வழங்குகின்றனர். இப்போட்டிகளில் தமிழகம்முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்தும் தேவகோட்டைபெருந்தலைவர்மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளிதான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 5.00 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாணவர்களைப் பேருந்துமூலம் திருச்சிக்கு ஆசிரியர் அழைத்துச் சென்றார். இவ்வாய்ப்பு அரசு உதவி பெறும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குகிடைத்தநற்பேறுஆகும். இப்பள்ளித்தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கணிதத்திறன் போட்டிக்கான தேர்விற்கு மாணவ மாணவியரை ஆயத்தப் படுத்தினார். கண்ணதாசன், ஆகசுகுமார், சீவா, யோகேசுவரன், தனலெட்சுமி, பார்கவி இலலிதா, தனம், கார்த்திகா ஆகிய மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன்திருச்சி அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்துச்சென்று தேர்வில் பங்குபெறச் செய்து அழைத்து வந்தனர். மாணவமாணவிகள்மிகுந்த ஆர்வமுடன் தேர்வு எழுதியதாகத் தெரிவித்தனர்.