தோழர் தியாகு எழுதுகிறார்  104: நலக்கேடு நல்காப் போக்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி) நலக்கேடு நல்காப் போக்கி இனிய அன்பர்களே! பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம். காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது…

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே! திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக! பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின்  அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது. தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர். நமது மொழியும் இனமும்…