மூத்த குடிமக்களுக்கான கட்டணமின்றிப் பயணச்சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது

    முதலமைச்சர் செல்வி செயலலிதா அறிவித்துள்ள, சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் புதிய சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்வதற்கான அடையாளச்சீட்டுகளை முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.   அரசுப் பேருந்துகளில், 60 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வகை செய்யும் புதிய திட்டம் ஒன்றை, முதலமைச்சர் செல்வி செயலலிதா, கடந்த 18- ஆம் நாள் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இன்றுமுதல்…

வெளியூர்ப் பேருந்துகளையும் கட்டணமின்றி இயக்க வேண்டும் – இராமதாசு

வெளியூர்ப் பேருந்துகளையும் கட்டணமின்றி இயக்க வேண்டும்! மதுக்கடைகளை மூட வேண்டும்!  பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தல்! சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-   பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் உணவு முதலான உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களையும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர்ப் பேருந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டோர் சொந்த ஊர் செல்ல வசதியாக வெளியூர் செல்லும் பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும். வெள்ளத் துயர்…

தேவதானப்பட்டியில் உயிரோடு விளையாடும் அரசுப்பேருந்துகள்

தேவதானப்பட்டிப் பகுதியில் உயிரோடு விளையாடும் அரசுப்பேருந்துகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் முறையான பேணுதலின்றி இயங்குவதால் பொதுமக்களின் உயிருக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் முறையான பேணுதலின்றி இயக்கப்படுவதால்; பொதுமக்கள் உயிருக்குக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் சரியான நிறுத்தி, முடுக்கி ஆகியவற்றுக்கு இழுவைத்தன்மை குறைந்து காணப்படுகிறது.   இதற்காக ஓட்டுநர்கள் காரைக்கற்கள்(பேவர்பிளாக் கற்கள்), செங்கல் போன்றவற்றை முடுக்கி அடிப்பாகத்தில் வைத்துவிடுகின்றனர். இதே…

தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்   தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன.   மேலும் இப்பகுதியில் விளையும்,…

தேனியில் சீர்கெட்ட அரசுப்பேருந்துகள்

தேனிப் பகுதியில் பேணுகையின்றி இயங்கும் அரசுப்பேருந்துகள்   தேனிப்பகுதியில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் பேணப்படாமல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.   தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டியில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வழியாக குள்ளப்புரம் செல்கின்ற அரசுப்பேருந்துகள் தக்கமுறையில் பேணப்படுவதில்லை. இதனால் மழைக் காலங்களில் பேருந்துகளில் மழைத்தண்ணீர் கூரையின் வழியாக வந்து பொதுமக்கள் குடைபிடித்துச்செல்லும் அவலநிலை உள்ளது.   சில பேருந்துகளில் இருக்கைகள் உடைந்துள்ளன; உடைந்த இருக்கைகளின் இரும்புத்துகள்கள் பயணிகளுக்கு இரத்தக்காயம் ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பேருந்தின் நடுப்பகுதி, ஓட்டுநர் அண்மையில் பெரிய பெரிய…

அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)

தனியார் பள்ளிப்பேருந்துகளில் அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டிப் பகுதிகளில் தனியார் பள்ளிப்பேருந்துகளில் அளவுக்கதிமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் பேரிடர் நேர்ச்சி ஏற்படும்   கண்டம் உள்ளது.   தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வேல்நகர், தண்ணீர்ப்பந்தல் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.   தனியார்பள்ளிகளில் கும்பகோணம் இடர்நேர்ச்சி ஏற்பட்டபின்பும், சென்னையில் பள்ளியூர்திகள் இடர்நேர்ச்சிகளுக்கான பின்பும் அரசு சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதன் படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன ஆய்வு மேற்கொண்டு ஊர்திகளைச்…

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் எதிரொலி-அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

தேவதானப்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அரசுப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் பெறப்பட்டது. இதனால் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திண்டுக்கல், தேனிப்பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிமுக பொதுச்செயலாளரைப் பிணையில் விடுவிக்கதனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. மேலும் தொடர்ச்சியாகக் காந்தி பிறந்தநாள், சரசுவதி பூசை, அடுத்து வந்த சனி, ஞாயிறு, அடுத்து ஈகைத்திருநாள் எனத் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் முதலானோர் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இந்நிலையில் அனைவரும் தங்கள் ஊருக்கும் திரும்பும் நேரத்தில் தனியார் பேருந்துகள் வேலை…