தமிழுடன் வாழப் பொங்கல் நாளில் வாழ்த்துகிறோம்!
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தமிழர் திருநாள் வாழ்த்து திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து உழவர் திருநாள் வாழ்த்து வணக்கத்துடன் அகரமுதல தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம்
பொங்கல் வாழ்த்தும் பொங்கல் வேண்டுகோளும்
தமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021
பொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!
பொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ
பொங்கல் புத்தாண்டு வாழ்த்து பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலெனப் பொங்கலிட்டு வாழியவே! முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ
தமிழெனப் பொங்கிடு! – ப.கண்ணன்சேகர்
தமிழெனப் பொங்கிடு! உழைத்திடப் பொங்கிடு! உரிமைக்குப் பொங்கிடு உதவிடப் பொங்கிடு ஊருக்குப் பொங்கிடு தழைத்திடப் பொங்கிடு தமிழெனப் பொங்கிடு தருமத்தைப் பொங்கிடு தளராது பொங்கிடு பிழையறப் பொங்கிடு பெருமையாய்ப் பொங்கிடு பிணக்கிலாப் பொங்கிடு பார்போற்றப் பொங்கிடு மழையெனப் பொங்கிடு மலரெனப் பொங்கிடு மதமிலாப் பொங்கிடு மனிதனாய்ப் பொங்கிடு இயற்கையோடு பொங்கிடு இரக்கதோடு பொங்கிடு இணக்கமெனப் பொங்கிடு எழிலாகப் பொங்கிடு தயங்காமல் பொங்கிடு தவறாது பொங்கிடு தடுக்காமல் பொங்கிடு தணிந்திடப் பொங்கிடு வியந்திடப் பொங்கிடு விடுதலைக்குப் பொங்கிடு வேளாண்மை பொங்கிடு வெற்றியால் பொங்கிடு சுயமாகப்…
‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்துகள்!-இலக்குவனார் திருவள்ளுவன்
‘அகரமுதல’ இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் பகிர்வாளர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் பரப்பாளர்களுக்கும் அல்லன தொலையவும் நல்லன பெருகவும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கிடவும் அன்பு வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர் ‘அகரமுதல’ < www.akaramuthala >
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28 1.3 பொங்கல் வாழ்த்து பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் மூலம் பாடியுள்ளார். ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ என்னும் கவிதை முப்பது அடிகளைத் கொண்டது. 1964 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்து என்னும் கவிதை பதினோரு அடிகளையும், 1965 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்துக் கவிதை ஏழு அடிகளையும் கொண்டுள்ளது. ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ புலப்படுத்தும் கருத்துகள் போற்றத்தக்கன. உழவையும் தொழிலையும்…
தமிழ்வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்! – வாணிதாசன்
செய்யும் விளைந்தது; தையும் பிறந்தது; செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! – புதுச் செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! பொய்கை புதர்ச்செடி பூக்கள் நிறைந்தன; பொன்னொளி எங்கணுங் கண்டோம்! – புதுப் பொன்னொளி எங்கணுங் கண்டோம்! மாவும் சுளைப்பலா வாழையும் செந்நெலும் வந்து குவிந்தன வீட்டில்! – தை வந்தது வந்தது நாட்டில்! கூவும் குயிலினம் கூவாக் குயிலினம் தாவிப் பறந்தது மேல்வான்! – ஒளி தாவிப் பறந்தது கீழ்வான்! சிட்டுச் சிறுவரின் செங்கைக் கரும்புகள் தொட்டுப் பிசைந்தன பொங்கல்! – அதை இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!…
நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ.
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்! பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலென பொங்கலிட்டு வாழியவே! முனைவர் மு.பொன்னவைக்கோ
வளந்தரும் வாழ்த்து
வளந்தரும் வாழ்த்து சுண்ணச் சுவர்கள் மின்னலிட வண்ணக் கோலம் பலவகையாக மாவிலைத் தோரணம் காற்றாட மல்லிகைச் சரங்கள் மணந்தாட கொஞ்சும் புத்தாடை குதுகலமாக மஞ்சள் இஞ்சி மங்கலமாக பச்சரிசி பொங்கல் பளபளக்க கட்டிக் கரும்பு நாவினிக்க தந்தையும் தாயும் வாழ்த்திட சிந்தைசீர் மகன்மகள் வணங்கிட இல்ல மகளிர் யாவருமே விளக்கேற்றி வருகதிரைத் துதிக்க உற்றார் உறவினர் ஒன்றுகூடி பற்றுடன் பொங்கலோ பொங்கலென தமிழர் திருநாளில் குடும்பமுடன் தழைத்து வாழ்கநீர் பல்லாண்டே. . . . தமிழகத்தாய்க்குழு . . . பொன் தங்கவேலன்
நம்வாழ்வு விடிந்திடட்டும் ! – எம்.செயராமன்
வெள்ளம் வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ! மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும் மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே…
