பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து!   பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!   பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து!   பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து!   பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து!   பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து!   பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து!   பொங்கல் திருநாள்  புதுக்கட்டும் சாதிமதம்…

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!   காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் –…

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்   பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை…

‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து!

  தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! இனப்படுகொலையாளன் பக்சே வீழ்ந்தான் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம் இப்பொங்கலை! வரும் புத்தாண்டில் தமிழ் ஈழத் தனி நாட்டிலும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் புத்தாண்டை என்னும் நம்பிக்கையில் கொண்டாடுவோம் இப் பொங்கலை! அகரமுதல இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் எல்லாரும்  எண்ணியவாறு நல்லன எல்லாம்  எய்தி இன்புற்றிருக்க வாழ்த்துகள்! பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழிய! வையகம் வாழ்க! வான் தமிழ் வெல்க! (-தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்…

பொங்கலோ பொங்கல்! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பொங்கலோ பொங்கல் என்றுபா டுங்கள் மன்றிலா டுங்கள் எங்கள்நா டெங்கள் அன்புநா டென்று நன்றுபா டுங்கள் பொங்கியா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! தங்கமே தங்கம் மண்டுநீ ரெங்கும் இங்கும்வா னெங்கும் நன்றுகா ணுங்கள் மிஞ்சியா டுங்கள் சிந்துபா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! எங்கும் ஆதந்து லந்தபா லுங்க ரும்பினோ டும்க லந்துமே பொங்க நைந்தவா கும்ப ழங்கள் தே னுங்க லந்துவா னுங்க மகிழ்ந்தவா றுண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! இங்குநா மின்று கண்டபே ரின்பம் என்றுமே…

பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா! மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா! கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு கழனி உழுபடைக் கருவிகள் காளை உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி வயலில் வீட்டில் நாட்டில் எங்கும் புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள் இத்தரை யெங்கும் இன்பமே எனினும் வெற்பினை எறிந்து வீரம் விளைத்த அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன் இற்றை நாளிலும் இந்தியச் சிறையில் இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்? 00000 ஆரிருள் கவிந்த அழகிய…

பொங்கல் வாழ்த்து

  பாரினில் எங்கும் மக்கள்   பலநலம் பெற்று வாழ சீரிய வழியில் எல்லாம்   சிறப்புகள் மேன்மே லோங்க மார்கழித் திங்கள் சென்று   மலர்ந்த தைத்திங்கள் நாளில் ஆர்வமோ டளித்தேன் இந்த   அணிமிகு பொங்கல் வாழ்த்தை! – புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி புள்ளியியல் அலுவலர்(ஓய்வு) தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம் திருவொற்றியூர் பாரதிப்பாசறை துணைத்தலைவர், சோழர் கலாலயம், இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…

எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!

குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி வசியும்      வளனும்             சுரந்து            வாழியர் வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும் பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே. –  செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்        (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !

உலகின்    வடிவம்   உருண்டை   என்பதை உருபெரும்  அறிவியலாளர்   கலிலியோ  கூறினார் கலிலியோ    கூற்றை   கண்கண்ட  நாடுகளுக்கு கருத்துரையாகப்   பரப்புரை  செய்தார்   ஆனால் ஈராயிரத்து   ஐநூறுக்குமுன்னே   சீராயிரம்  படைத்த இருவரிமறை  ஆசான்   திருவள்ளுவப்  பெருமகன் உருவான  உலகம்   உருண்டை  என்றே இருவரியிலே   உலகிற்கு   இயம்பினார்   அன்றே ! ”  சுழன்றும்ஏர்ப்    பின்னது   உலகம் ;   அதனால் உழந்தும்    உழவே    தலை ”    என்றாரே படித்தனர்   ஆயினும்    பரப்புரை  செய்தனரா ? பிறநாட்டார்  சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே ! சுழலும்   உலகம்கூட  உழவரின்  பின்செல்லும் நிழலாக  இருக்கிறதென …