சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019
தை 26, 2050 2019ஆம் வருடம் பிப்ரவரி 9 நேரம்:-11மணி முதல் 6 மணி வரை கொமட்சுகவா சகுரா அரங்கம் சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள் அனைவருக்கும் அன்புநிறைந்த இனிய வணக்கம்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 / 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை…
இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா
18 ஆவது பொங்கல் விழா, இலண்டன்
18 ஆவது பொங்கல் விழா, இலண்டன் தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை சனவரி 14, 2018 பிற்பகல் 3.00 – இரவு 7.00 கீழைஆம் (East Ham) தமிழ்க்குமுகாயம்
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம், நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 22, 2048 / பிப்பிரவரி மாதம் 4ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி,பண்பாடு,வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அனைவரும்…
தனித்தமிழ்த் திருநாள் – அண்ணா
தனித்தமிழ்த் திருநாள் பொங்கற் புதுநாளெனும் தமிழர் திருநாள் பொய்யுரையின் மீது கட்டப்பட்ட பூசாரி விழாக்களிலே ஒன்றல்ல! தனித்தமிழ்த் திருநாள்! கருத்தளிக்கும் பெருநாள்! தமிழன், உழைப்போரை உயர்த்திடும் பண்பையும் உழைப்பின் பயனை ஊருடன் கூடி உண்டு, இன்பம் பெறும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வந்தது பொங்கற் புதுநாள்! அறுவடை விழா! விதைக்காது விளைந்த கழனியிலிருந்து வந்த செந்நெல்லைக் குத்தாது அரிசியாக்கி, வேகாது வடித்தெடுத்து, உண்ணாது காக்கைக்கு வீசிடும் உலுத்தர் விழாவல்ல! உழைத்தோம், பலன் கண்டோம்; கண்ட பலனை மற்றவருடன் கலந்து உண்டு மகிழ்வோம் என்ற…
மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! – அண்ணா
மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும் என்று கூறினோர் அல்லர் நம் தமிழர்! எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டா என்று இருத்தல் நன்றன்று. வினை, வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்திட்டால் பின் வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன் இருந்திடாது வித்து எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொள்ளல் வேண்டும். அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால்தான், வாழ்வில் வளம் காண…
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : பொங்கல் விழா
தை 08 & 09, 2048 சனிக்கிழமை சனவரி 21 &22, 2017 பொங்கல் விழா போட்டிகளும் பரிசு வழங்கலும் த.மகராசன்
புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது”
திருக்குறள் அறிஞர் புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது” புரோபசு சங்கம் (PROBUS CLUB OF CHENNAI) கொண்டாடிய பொங்கல் விழா சுழற் சங்கத்தின் (ROTARY CLUB) ஆதரவில் இயங்கும் புரோபசு சங்கம் அரசுப் பணியினின்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (IAS OFFICERS) முதலான 350-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைத் தன்பால் கொண்ட ஒரு மாபெரும் சங்கம். 1992-இல் தொடங்கப்பெற்ற இச்சங்கம் உலகளாவிய நிலையில் பாங்கான பல தொண்டுகளை ஆற்றி வருகின்றது. ஆதரவற்ற…
புழுதிவாக்கத்தில் பொங்கல் விழா
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் 13ஆம் ஆண்டு விழா பொங்கல் விழா பரிசுகள் விருதுகள் வழங்கல் தை 24, 2047 / பிப்.07, 2016
பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் : வி. சபேசன்
பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் இம் முறை புலம்பெயர் நாடுகளில் பொங்கல் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தக் கொண்டாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழர்களிடம் எஞ்சியுள்ள தமிழர் திருநாளான பொங்கலுக்கு விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆயினும் சில செய்திகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்த ஆண்டு பொங்கலை இன்னும் சிறப்பாக, ஒரு தமிழர் திருநாள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. பொங்கல் விழா என்பது தமிழர்…
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016
அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்! மார்கழிக்குளிரை வென்று தத்தம் மனைகளின் முற்றத்தில் மாக்கோலமதனைத் தீட்டி பசுஞ்சாணப் பிடியதனில் பரங்கிப்பூச் சொருகி வைத்து ஆதவன்தன் வடதிசை பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த களைப்பு நீங்க காளைகளை அடக்கி ஆளும் தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க சீர்கொண்டு வந்திறங்கும் சுறவமகளை வரவேற்று வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி புத்தரிசிப் பொங்கலிட்டுப் பொங்கலோ!பொங்கல்!! எனத் தீந்தமிழ் மாதரும் தோள்கள் தினவெடுத்த தமிழரும் குதூகலமாய்க் குடும்பத்துடன் தொன்றுதொட்டு தரணிதனில் திகட்டாமல் கொண்டாடி மகிழ வாய்த்ததொரு நன்னாளாம்!-நம்…
தமிழர் கலை இலக்கியப் பொங்கல் விழா, தஞ்சாவூர்
தஞ்சைத் தமிழ்ச் சங்கம், மருதப்பா அறக் கட்டளை