தக்கவர் சசிகலாவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தக்கவர் சசிகலாவே! ? அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக யார் வரவேண்டும் என்பது அக்கட்சி சார்ந்தது. இதுகுறித்துப் பிறர் கருத்து தெரிவிக்கலாமா? ஆமாம். ஒரு கட்சியின் உட்கட்சி வேலைகுறித்துப் பிறர் கவலைப்படத் தேவையில்லைதான். ஆனால், அஇஅதிமுக ஆளுங்கட்சி. ஆளுங்கட்சியின் முடிவு அரசையும் கட்டுப்படுத்தும். எனவே, அக்கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது பலரும் வேண்டுமென்றே திரித்துப் பொய்யைப் பரப்புவதால் நாமும் நம் கருத்துகளைத்தெரிவிக்கலாம். ? ஆனால், அக்கட்சியில் ஒரு பகுதியினரும் அக்கட்சி சாராதவர்களில் பெரும்பகுதியினரும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடாது என்றுதானே…
கல்விமொழியும் தமிழே! மத்திய அலுவலக மொழியும் தமிழே! – ம.தி.மு.க. தீர்மானம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 22-ஆவது பொதுக்குழு 04.02.2014 செவ்வாய்க்கிழமை காலை வானகரத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:- தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்திலும், அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழியை அலுவல் மொழி ஆக்கிட வேண்டும்; மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் எல்லா நிலைக்கல்வியும் தமி்ழ்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தமிழ்மொழி அரியணை ஏறுவதற்கும் தொடர்ந்து பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய சனதா…
மத்திய அரசுக்குக் கண்டனம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழகத்திற்குப் போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின் முறையீடுகளைத் தொடர்ந்து மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் செயலலிதா முன்னிலையில் (திசம்பர் 19, 2013 அன்று) நடைபெற்றது. செங்கோட்டையே இலக்கு! பொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர் செயலலிதா, “மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி…
காங்.உடன் கூட்டணி இல்லை – எதிர்பார்த்தவாறு கலைஞர் அறிவிப்பு
சென்னை – இன்று (15.12.13) நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடனான கூட்டணிக்கு எதிராகப் பேச இசைவளிக்கப்பட்டனர். குத்தாலம் கல்யாணம், மேனாள் அமைச்சர் நேரு, மதுரை முனியாண்டி, திருச்சி சிவா, மேனாள் அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் பழனிமாணிக்கம், சென்னை அன்பழகன் முதலான பலரும் வஞ்சகக் காங்.உடன் கூட்டணி வேண்டாம் எனக் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான மக்களின் உணர்வினை இதுவரை ஏற்காத தி.மு.க. தலைமை, சூழ்நிலையின் உந்துதலால் – பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இணங்க உடன்படுவதுபோல் – இப்பொழுது…