(தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!, நலங்கிள்ளி – தொடர்ச்சி) கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் 1) வேண்டாம் பொதுத்தேர்வு(நீட்டு)! அனிதா முதல் செகதீசன், அவருடைய தந்தை வரை தமிழ்நாட்டில் 2017 தொடக்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் 17 உயிர்கள் நீட்டு தற்கொலைக்குப் பலியாகியுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அனிதா எடுத்த மதிப்பெண் 1200க்கு 1176. அனிதாவின் மருத்துவக் கல்விக் கனவு மெய்ப்பட இந்த மதிப்பெண் போதும். ஆனால் நாடுதழுவிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு என்னும் நீட்டு அவரது…