தேவதானப்பட்டிப் பகுதிகளில் நடைபெற்ற பணியினை மீண்டும் மீண்டும் செய்து அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பொதுப்பணித்துறை!     தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கண்மாய் ஏற்கெனவே குளத்தில் உள்ள கரைகளை மேம்படுத்திச் சீராக வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அப்பகுதியில் உள்ள உழவர்கள் பயனடைந்து வருகின்றனர்.இப்பொழுது பொதுப்பணித்துறை, ஏற்கெனவே செய்த வேலையை மீண்டும் உடைப்பு இயந்திரம் கொண்டு கரையை உயர்த்துகின்ற பணியினை செய்து வருகிறது. இதே போல செங்குளத்துப்பட்டி கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் பணி நடைபெற்றது. அப்போது…