மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.
மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும் தமிழக முதல்வர் (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர் முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை…