தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்
(தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.2) தோழர் தியாகு எழுதுகிறார் பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன் குத்தூசி குருசாமி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்கள். அதன் முதல் மாநாட்டில் விசயவாடா கோரே போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அமீர்சானோடு நானும் அதில் கலந்து கொண்டேன். அதில் இலெனின், மார்க்குசு போன்றோரின் புத்தகங்கள் இருபத்தைந்து பைசாவிற்கு விற்கப்பட்டது. மார்க்சியத்தோடான முதல் அனுபவம் அப்படித்தான் ஏற்பட்டது. [அமீர்சான் வீட்டில்தான் காரல் மார்க்குசு படம் பார்த்தேன். “காட்டுக்கு ஒரு…