(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 17. பொய்ம்மை விலக்கல் நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை. நடக்காததைச் சொல்வது பொய் ஆகும். நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை. நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும். தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம். தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும். புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம். குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும். வாய்மையைத் தருவதே வாயென வறிக. வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே “வாய்”…