திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 098. பெருமை தொடர்ச்சி) திருக்குறள் 02. பொருள் பால் 13. குடி இயல் 99. சான்றாண்மை அறவழியில் நிறையும் பண்புகளைத் தவறாமல் ஆளும் பெருந்தன்மை. கடன்என்ப நல்லவை எல்லாம், கடன்அறிந்து, சான்(று)ஆண்மை மேற்கொள் பவர்க்கு. கடமைகள் உணரும் பண்பர்க்கு, நல்லவை எல்லாம் கடமைகளே. குணநலம், சான்றோர் நலனே; பிறநலம், எந்நலத்(து) உள்ளதூஉம் அன்று. சான்றோர்க்கு, உயர்பண்பே சிறப்பு; மற்றவை, சிறப்புக்களே அல்ல. அன்பு,நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு, ஐந்துசால்(பு)…