திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15. கற்பு இயல் 123. பொழுது கண்டு இரங்கல் பிரிந்த காதலர், துயர்மாலைப் பொழுது கண்டு மனம்வருந்தல். (01-10 தலைவி சொல்லியவை) மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ; வாழி! பொழுது. மாலையே நீ பொழுதே இல்லை; பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல். புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல், வன்கண்ண தோநின் துணை? மாலையே! நீஏன் வருந்துகிறாய்?…