கம்பன் கழகம், காரைக்குடி    தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி…