(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31. தொடர்ச்சி)                    ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 மகமதியரும் கிருத்துவரும் வாலாசா     தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாசா என்னும் பெயரும் உண்டு. அப் பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாசாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம்…