தாலியறுக்கும் மகளிர் காவல்நிலையங்கள் பணத்தால் பிரியும் பல குடும்பங்கள் மஞ்சள் குளிக்கும் பெண் காவலர்கள். திருமணங்கள் மேலுலகில் உறுதி செய்யப்படுகின்றன என்பது மக்களின் நம்பிக்கை.   திருமணம் நடைபெற்றவுடன் புரிதலுணர்வுடனும் விட்டுக் கொடுத்தும் வாழ்பவர்கள் வாழ்க்கை என்றும் இனிக்கும். சிலருக்கு ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்பதுபோல் 90 நாள்மட்டும் இல்லற வாழ்க்கை இனிக்கும். அதன்பின்னர்தான் கணவன் மனைவியரின் உண்மை உருவம் தெரியவரும். இதற்கிடையில் கணவனின் தாய், தங்கை, அக்கா ஆகியோர்களின் தன்முதன்மைச் செயல்களால் குடும்பத்தில் புயல் வீசத்தொடங்கும்; கணவன், மனைவியரிடையே பிணக்கு…